கடலலைகள் வந்து கால் தொடும்போது..
குளிரதிகாலை மிதசூட்டில் பாலருந்தும்போது...
சத்தமில்லாத கண்ணீர் விழுங்கும்போது, விம்மல் அடக்கும்போது...
வெங்காயத்தோடு விரலையும் நறுக்கும்போது...
மலையுச்சியில் விடியல் பார்க்கும்போது...
செல்லமாய் வளர்த்த பூனை இறந்தபோன காலை முழுதும் அழுதபோது...
உன் குருந்தகவல் வரவெதிர்ப்பார்த்து அது வராதபோது...
என் என்றைக்குமான தோழி நீயென்ற உன் பழைய மின்னஞ்சல் பார்க்கும்போது...
வருடமிரண்டு சென்ற பின் முன்பு நாம் நின்று பேசிய மொட்டை மாடியில் நிற்கும்போது...
ஒவ்வொரு கணமும் என்னுள்ளில் இருந்து கசிந்து காற்றில் கலக்கிறது கொஞ்சம் வெகுளித்தனம்.
No comments:
Post a Comment