பணியாரம்.
இனிப்பாயும், சில சமயம் காரமாயும், மாவு சரியில்லையெனில் புளிப்பாயும் சில நொடிகள் நாவில் நீடித்து, பல கணங்கள் மனதில் சுவையை நிறுத்தும் பண்டம்.
பானி பூரி.
வெளியே முறுகலாய், உள்ளே இனிப்பும், புளிப்பும், காரமுமாய். பல சுவைகளின் சங்கமம். கண நேர இருப்பு தான்.
சில சமயம் நமக்கு தோன்றும் சில வரிகளும் அப்படித்தான். அளவு சிறிதே ஆனாலும், தனித்த ஒரு கருத்தை விளக்கம் ஏதுமில்லாமல் கூறிவிடும்.

நிச்சயமாக ஹைக்கூ இல்லை. அதற்கு இலக்கணமுண்டு. ’பணியாரங்களுக்கு’ அது இல்லை. அது கவிதைகளில் சேர்த்தி. இது... கவிதை, உரைநடை என எதுவுமில்லாமல் இரண்டும்கெட்டான் (?). ஹைக்கூவின் தத்துப்பிள்ளை.
டுவிட்டர் காலத்து புதுக்கவிதை என்றாலும் தவறில்லை. படிப்பதற்கு எளிதாகவும், சிறிதாகவும், ஒரு ’நினைவு’ அளவு மட்டுமே கொண்டிருத்தல் நலம்.
உங்கள் பார்வைக்கு நான் எழுதிய சில.
“அதி காலை கனவில் கேட்ட கோயில் மணிகள்,
நான் கண் விழித்ததும் மாறியிருந்தன
என் தலை வருடும் அம்மாவின் கைகளில்
கண்ணாடி வளையல்களாய்...”
***
“கடல்கூட உலகின் முடிவில் வானைத்தொடுகிறது
பகல்கூட மாலையின் முடிவில் இரவைத்தொடுகிறது
நான் என் மூச்சின் முடிவிலாவது உன்கைவிரல் தொடுவேனா?”
***
”செவிகளில் கேட்டுக்கொண்டே இருக்கும் பலகுரல்களை
கொஞ்சநேரம் கொன்றுவிட உதவும்
காதுமடலை என்நேரமும் தழுவும் என் கருநிற
பாட்டுக்கேட்பான்கள்...”

அருமையான பகிர்வு !!!! ஆங்கில புலவியின் அட்டகாசமான கவிதை மாதிரியான ஹைகூ :) தொடரட்டும் உங்கள் களப்பணி :) வாழ்த்துக்கள் !!!!
ReplyDeleteஅன்புடன்......... கணபதி <3
நன்றி கணபதி. :) “புலவி” ஹா ஹா! :)
ReplyDelete