Friday, June 15, 2012

கவிதை எலிகள்

ஒருவழியாக வேலை செய்ய போகும்போதும், முயற்சி செய்து தூங்க போகும்போதும் தலைநீட்டுகின்றன உன் செல்ல கவிதை எலிகள்.அவற்றின் வால் பிடித்து, உயிர்கொடுத்து உன்னிடம் அனுப்புவதர்குள் நான் படும் பாடு... :)

உறவு

முதல் துளி கண்ணீர் அரும்பியதும், இருகக்கட்டி முகம்புதைத்தழும் உறவில்லை,
உலகமே உரங்கியபின் குருந்தகவல் அனுப்பும் உறவில்லை,
கைநீட்டி கேட்கும் உறவில்லை,
கால்கட்டி பார்க்கும் உறவில்லை,
அருகமர்ந்து படிக்கும் உறவில்லை,
அருகேயே இருக்கும் உறவில்லை.

எங்கேயோ இருந்து வந்து உன் நினைவுகளால் மட்டும் என்னை அழவைக்கும் உன் உறவு என்ன உறவு?

குரல்

என் பிறந்தநாள் வாழ்த்தை முணுமுணுத்த உன் குரலை நினைவு படுத்தினாலும், சங்குக்குள் பெசும் காற்றைக் கேட்க பிடித்திருக்கிறது எனக்கு.

அலை

என் துளி கண்ணீரை தனதென கொண்டு, ஓடி வந்து உஷ்ஷ் எனும் கடலிடம் அழப்பிடித்திருக்கிறது எனக்கு.

காலாவதி

பாரிஸ் நகரத்தின் ஒரு கருநீல மாலையில் காதல் மழையாய் பெய்யும். அப்பொழுதும் எனக்காய் ஒரு கையில் குடை பிடித்து கூட நடப்பாய் நீ.